தியத்தலாவை, அம்பதானன – ரட்கரவ்வ பிரதேசத்தில் உள்ள வீடொன்று நேற்று (05) பிற்பகல் ஏற்பட்ட தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு அறையில் இருந்து திடீரென தீ பரவியதால் வீட்டின் மூன்று அறைகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதுடன் அந்த அறைகளில் இருந்த தளபாடங்களும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு என சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ராமு தனராஜா