துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால்கூட இனிமேல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் மட்டுமே விடுதலை செய்ய முடியும். அவ்வாறு செய்தால்கூட அது எனக்கு பிரச்சினை இல்லை.
இவ்விவகாரம் தொடர்பில் எனக்கு தற்போது கோபம் மற்றும் வைராக்கியம் இல்லை. எனவே, அந்நபரை விடுதலை செய்தாலும் ஒன்று, செய்யாவிட்டாலும் ஒன்று. எனக்கு அதில் எவ்வித தாக்கமும் இல்லை.
அந்நபர்மீது எனக்கு இருந்த வைராக்கியம் தற்போது இல்லை என்றே தோன்றுகின்றது. தற்போதைய ஜனாதிபதியோ அல்லது இனிவரும் ஜனாதிபதியோ அவருக்கு மன்னிப்பு வழங்கினால் அப்பிரச்சினையை நான் பெரிதுபடுத்தப்போவதில்லை.
பொதுமன்னிப்புக்காக எனது தரப்பில் ஒத்துழைப்பு தேவைப்பட்டால் அதனை வழங்குவதற்கும் தயார்.” – என்றார்.