தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகளைத் தமிழகப் பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ் புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் பொலிஸார் தமிழகப் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனத்தில் இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்களைக் கடத்தும் நோக்கில் ஏற்றிய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.