தெளிவத்தை ஜோசப் மூன்றாவது நினைவேந்தல் நிகழ்வு நாளை எல்லயில்!

தெளிவத்தை ஜோசப் மூன்றாவது நினைவேந்தல் நிகழ்வு நாளை எல்லயில்!

புகழ்பூத்த இலக்கியவாதி சாகித்தியரத்னா அமரர் தெளிவத்தை ஜோசப்பின் மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எல்ல , நிவ்பர்க் தமிழ் மகா வித்தியாலயத்தில் இயங்கும் குறிஞ்சி பேரவையின் ஏற்பாட்டில் நாளை 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணிக்கு வித்தியாலயத்தில் பேரவையின் தலைவர் சு.இராஜமாணிக்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் வரவேற்புரையை பேரவை உறுப்பினர் கே.இளையராஜாவும், தலைமையுரையை பேரவையின் தலைவர் சு.இராஜமாணிக்கமும் நிகழ்த்தவுள்ளனர்.

தெளிவத்தை ஜோசப் எனும் நாவலாசிரியர் எனும் தலைப்பிலான சிறப்புரையை கொட்டக்கலை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆ.கலையரசுவும், தெளிவத்தை ஜோசப் எனும் சிறுகதையாசிரியர் எனும் தலைப்பிலான சிறப்புரையை கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜெ.சற்குருநாதனும் , தெளிவத்தை ஜோசப் எனும் ஆய்வாளரும் ஆவணக்காப்பாளரும் எனும் தலைப்பில் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகரும் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்வில் தெளிவத்தை ஜோசப் நினைவு விருது மூத்த எழுத்தாளர் டீ.எஸ். டேவிட்டிற்கு வழங்கப்படவுள்ளது.

நிகழ்வின் நன்றியுரையை ஆசிரியர் ஆலோசகர் என்.மனோகரன் நிகழ்த்தவுள்ளதுடன் நிகழ்ச்சி தொகுப்பை எழுத்தாளர் ராஜிவ்காந்தி வழங்கவுள்ளார்.

Related Articles

Latest Articles