சமையல் தேவைப்பாட்டுக்காக தேங்காய் எண்ணெய் வாங்க சென்ற இளைஞர், படியில் வழுக்கி வீழ்ந்ததில் – கண்ணாடி போத்தல் உடைந்து குத்தப்பட்டு ஏற்பட்ட காயத்தையடுத்து உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று சனிக்கிழமை (23) முற்பகல் 11.30 மணியளவில் வீட்டிற்கு தேங்காய் எண்ணெய்யை வாங்குவதற்காக கடைக்கு செல்லும் போது வீட்டிற்கு அருகிலுள்ள படியில் வழுக்கி வீழ்ந்து கையில் இருந்த கண்ணாடி போத்தல் உடைந்து கழுத்தில் குத்தப்பட்டு காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.