மாற்று வழி இருக்கிறது என்கிறார் சுகாதார அமைச்சர்
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தடுப்பூசிகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சுகாதார அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. வாக்காளர் புத்தகத்தில் அவர்களின் பெயர் இருந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும். இல்லையெனில், குறித்த நபர் வசிக்கும் பிரசேதத்தில் கிராம உத்தியோகத்தர் அல்லது அரசாங்க அதிகாரி ஒருவரிடம் வதிவை உறுதிப்படுத்திக் கொண்டால், அதன்மூலம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் அதிகமானோர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.