” தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு இணக்கப்பாட்டுனான தேசிய வேலைத்திட்டம் ஒன்று அவசியம்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கிருலப்பனை பகுதியில் இன்று நடைபெற்ற கட்சி மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டு, பாரியதொரு அலைக்குள் சிக்கியுள்ளது. அதுமட்டுமல்ல எதிர்வரும் ஜுன் மாதம் கடன் செலுத்த வேண்டியும் உள்ளது. எனவே, தேசிய அரசு என்பதற்கு அப்பால், இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம்.” – எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
சர்வக்கட்சி மாநாட்டுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை அரசால் வெளியிடப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
