தேசிய வர்த்தக சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில் மீண்டும் அங்கீகாரம் பெற்ற Airtel Lanka

Airtel Lankaவின் மேம்படுத்தப்பட்ட சேவை மற்றும் மதிப்புமிக்க முதலீடுகள் NBEA 2021இல் விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

இளைஞர்கள் மத்தியில் இலங்கையின் மிகவும் விருப்பத்தக்க தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel Lanka மீண்டும் தேசிய வர்த்தக சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில் (NBEA) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தால் (NCCSL) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருது வழங்கும் நிகழ்வில் Airtel நிறுவனத்திற்கு ‘பிற சேவைகள்/பிற துறைகள்’ (Other Services / Other Sectors) பிரிவில் மெரிட் விருது வழங்கப்பட்டது. புத்தாக்கமான மற்றும் பலனளிக்கும் வாடிக்கையாளர் அனுபவங்களை உருவாக்கும் அதே வேளையில், நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவதில் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொடர்ச்சியான முதலீடுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து Airtel Lankaவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷீஷ் சந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “இத்தகைய சிறப்புமிக்க நிறுவனங்களின் மத்தியில் அங்கீகாரம் பெறுவது ஒரு கௌரவமாகும். கடந்த ஆண்டு வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான மதிப்பின் ஒரு பாடமாக இது அமைந்துள்ளது. சவாலான காலகட்டத்தை நாம் எதிர்கொள்ளும் அதேவேளையில், இலங்கையின் ஆற்றலை நாங்கள் தொடர்ந்து நம்பி வருகிறோம், மேலும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் மதிப்பை உருவாக்குவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் Airtel நிறுவனம் இதே பிரிவில் 2019இல் அங்கீகரிக்கப்பட்டு விருதினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. NBEA என்பது இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனத்தால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முன்னோடி விருது வழங்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இலங்கையில் சிறந்த கூட்டுத்தாபனத்தில் சிறந்த வர்த்தகங்களை அங்கீகரிக்கும் முதன்மையான தேசிய தளமாக இது ஒரு வலுவான நற்பெயரைப் பேணி வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles