நாடு தழுவிய ரீதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 1,694 சுற்றிவளைப்புகளில் 1,615 ஆண்கள் மற்றும் 61 பெண்கள் உள்ளிட்ட 1,676 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 119 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 45 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான 112 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகணத்தில் 733 சுற்றிவளைப்புகளில் 695 ஆண்களும் 35 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்தில் 185 சுற்றிவளைப்புகளில் 180 ஆண்களும் 05 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் (22) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைப்பற்றப்பட்ட போதைப்போருட்கள் விபரம்
