தேயிலை தளிர்களை களவாடிய இருவர் கைது!

பண்டாரவளை பகுதியில் அம்பிட்டிக்கந்த தேயிலைத் தொழிற்சாலையில் ஒரு இலட்சத்துமுப்பத்தையாயிரம் ரூபா பெறுமதியான தேயிலைத் தளிர்கள் களவாடப்பட்ட சம்பவம் நேற்று இரவு 2022-08-10 இடம்பெற்றுள்ளது.

இது குறித்து கொஸ்லந்தை பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட புலன் விசாரணைகளின் பின், தொழிற்சாலை களஞ்சிய பொறுப்பாளரும், தொழிற்சாலை தொழிலாளி ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் குடியிருப்புக்களை சோதனையிட்ட பொலிஸார் களவாடப்பட்ட
தேயிலைத் தளிர்களின் ஒரு பகுதியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக
கொஸ்லந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்னசிறி பண்டார தெரிவித்தார்.

இவ்விசாரணைகள் நிறைவுற்ற பின் அவ்விருவரும் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்றும் பொலிஸ் நிலைய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles