தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் பின்னடைவு!

நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் 10 மாதங்களில் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் மொத்த தேயிலை உற்பத்தி 258.9 மில்லியன் கிலோகிராம் எனவும், இந்த ஆண்டில் முதல் 10 மாதங்களில் மொத்த தேயிலை உற்பத்தி 211.1 மில்லியன் கிலோகிராம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் மொத்த இறப்பர் உற்பத்தி 66.3 மில்லியன் கிலோகிராம் எனவும், இந்த ஆண்டில் முதல் 10 மாதங்களில் மொத்த இறப்பர் உற்பத்தி 59.2 மில்லியன் கிலோகிராம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த 2021ம் ஆண்டில்மொத்த தேங்காய் உற்பத்தி 2577.2 மில்லியன்களாகவும், இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் தேங்காய் உற்பத்தி 2850 மில்லியன் என வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles