தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! – கடற்றொழில் அமைச்சர் உறுதி

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார்.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பலரும் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தார்.

தனித்தனி விஜயமாக வந்திருந்த இரு குழுவினரும், விகாரை வளாகத்தில் சந்தித்து, பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles