தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை, கொண்டக்கலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் பணம் , நகை மற்றும் இலத்திரனியல் உபகரணங்களையும் இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.
குறித்த இருவரில் ஒருவர் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் இவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் மற்றொருவர் 29 வயதுடையவர் எனவும் அவர் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று (15) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.