பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து பார்க்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கோரியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி நுவரெலியா சென்றிருந்த போது, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு கிடைக்கும் ஆயிரம் ரூபா வேதனம், அவர்களின் நாளாந்த வாழ்க்கைச் செலவுக்குக்கூட போதுமானதாக இல்லை.
இதனால், அதிகளவானோர் வேறு தொழில்களுக்கு செல்கின்றனர்.
எனவே, தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன், செய்யப்படும் வேலையின் அளவும் குறைவடைந்துள்ளது.
இது பெருந்தோட்டங்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்பதால் ஜனாதிபதி இது தொடர்பில், உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.










