நன்றிகடன் செலுத்துங்கள் – இங்கிலாந்திடம் வசீம் அக்ரம் கோரிக்கை

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இரண்டரை மாதம் இங்கிலாந்தில் தங்கி விளையாடிய பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி நன்றிக்கடன் செலுத்த வேண்டும் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன்பின் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் முயற்சியால் ஜூலை 8ஆம் திகதி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பயோ-செக்யூர் பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டு வரப்பட்டு போட்டி வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.

அதன்பின் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட சென்றுள்ளது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இரண்டு அணிகளும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து சென்றது. அங்கு 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டன. அதன்பின் கொரோனா பரிசோதனைக்குப்பின் பயிற்சி மேற்கொண்டன.

கொரோனா காலத்தில் வீரர்களின் உயிர்களை பணயம் வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விளையாட சம்மதம் தெரிவித்தது.இதற்கு நன்றிக்கடனாக 2022-ல் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘கொரோனா காலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் இங்கிலாந்து வந்ததற்காக இங்கிலாந்து அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது. பயோ-செக்யூர் சூழ்நிலையில் சுமார் இரண்டரை மாதங்கள் இருந்துள்ளனர்.

ஆகவே, எல்லாமே சரியாக சென்றால் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாட வேண்டும். இங்கிலாந்து வீரர்கள் அவர்ளுடைய சொந்த மைதானத்தில் விளையாடிய போன்று உணர்வார்கள் என்பதை என்னால் உறுதிப்பட கூற இயலும்.

அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான் போன்ற இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்று விளையாடினார்கள். அவர்கள் விரும்பி, மகிழ்ச்சியாக விளையாடினர். அவர்கள் சிறப்பானதாக உணர்ந்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அரசு, பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள், அவர்களுடைய ஸ்டாஃப்களுக்கு நான் பாராட்டு தெரிவித்தாக வேண்டும்’’ என்றார்.

Related Articles

Latest Articles