மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட நமுனுகுல, கந்தஹேன பகுதியில் உள்ள அதி கஷ்டப் பிரதேச பாடசாலையான மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் அண்மையில் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றில் முதன்முறையாக 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் த.செறிதார் தெரிவித்தார்.
சித்தியடைந்த மாணவர்களில் செல்வன் கே.தனுஷ்காந் -165, செல்வி ஈ.சிரண்யா-151, செல்வி எஸ். ரொஹார்தினி- 140 என புள்ளிகளைப் பெற்றுள்ளதோடு ஏனைய எட்டு மாணவர்கள் 100ற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று வித்தியாலயத்திற்கு 100 வீதப் பெறுபேற்றினை பெற்றுத் தந்து வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இம் மாணவர்களையும் வகுப்பாசிரியர் பி. புஸ்பகுமாரையும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துவதாக குறிப்பிட்டார்.
பசறை நிருபர்










