நம்பிக்கையில்லாப் பிரேரணை: முற்போக்கு கூட்டணி ஆதரவு – இதொகா எதிர்ப்பு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு எதிரணி தரப்பில் உள்ள மேலும் சில கட்சிகள் தீர்மானித்துள்ளன.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை என்பனவே இந்த முடிவை எடுத்துள்ளன.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட விடயத்தில் உயர்நீதிமன்ற பரிந்துரைகளையும், அரசமைப்பையும், நாடாளுமன்ற சம்பிரதாயத்தையும் சபாநாயகர் மீறியுள்ளார் என சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்துள்ளது.

இதனை ஆதரிப்பதற்கு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, விமல் வீரவன்ச தலைமயிலான உத்தரலங்கா சபாகய என்பனவும் தீர்மானித்துள்ளன.
அரச பங்காளிக்கட்சியான இதொகா எதிராக வாக்களிக்கும் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles