நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டார் சஜித்!

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் சிலர் பிரேரணையில் கையொப்பமிட்டனர்.

சபாநாயகர் தனது கல்வித் தகைமைகள் தொடர்பில் போலியான தகவல்களை வழங்கி மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார் எனக் கூறியே, அவருக்கு எதிரான அரசியல் சமரை, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த எதிரணிகள் ஆரம்பித்துள்ளன.

தனது பட்டப்படிப்பு மற்றும் கலாநிதி பட்டம் தொடர்பில் சபாநாயகர் உரிய தெளிவுபடுத்தலை வழங்க வேண்டும், அவ்வாறு இல்லையேல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி பதவி விலக வேண்டும். இவை இரண்டும் நடக்காத பட்சத்திலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் எனவும் எதிரணிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles