நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – ஜனாதிபதி

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளன.

மேலும் மரண நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்குக்கொள்ள முடியும் என அறிவிக்க்பபட்டுள்ளது.

Related Articles

Latest Articles