இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ{க்கும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான ஆதரவை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது நியூசிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
வர்த்தகம், முதலீடு, தொழிற்கல்வி, மூன்றாம் நிலை கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (சுஊநுP) இன் கீழ் ஈடுபாடு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இதேபோல், இலங்கையை தன்னிறைவு பெற்ற பால ; உற்பத்தி நாடாக மாற்றுவதற்காக 2013 ஆம் ஆண்டு கைச்சாதிடப்பட்ட பால் கூட்டுறவு ஒப்பந்தத்தை விரிவாக்குவது தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் நியூசிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
நவீன தொழில்நுட்பம், விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் நிலைதகு விவசாய நடைமுறைகள் மூலம் னுஊயு-வை வலுப்படுத்துவதன் ஊடாக, காலப்போக்கில், பால் இறக்குமதியில் நாடு சார்ந்திருப்பதை தவிர்க்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும், தொழிற்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியில் நீண்டகால ஒத்துழைப்பை நிறுவனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட இலங்கை-நியூசிலாந்து உயர்கல்வி மற்றும் திறன் கூட்டாண்மை செயலணியை தாபிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.