கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளைய (16) தினத்திலிருந்து தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை இந்த நடைமுறை தொடரும்.










