” நாட்டில் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையில் அவை குறித்து கவனம் செலுத்தாமல், செங்கடலுக்கு போர்க்கப்பல் அனுப்பும் முடிவை எடுக்கும் ஆட்சியாளர்களின் மூளையை நிச்சயம் பரிசோதிக்க வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
” நாட்டு மக்கள் மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர், வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு மாற்றமொன்றை நாமும் எதிர்பார்க்கின்றோம். மக்களின் கோரிக்கைகளும், எமது எண்ணங்களும் ஒருமித்தவையாக காணப்படுகின்றன. எனவே, ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள். இந்த வருடம் நிச்சயம் மாற்றம் ஒன்று ஏற்படும்.
நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன, அவற்றுக்கு தீர்வுகளை தேடுவதைவிடுத்து, செங்கடலுக்கு கப்பல் அனுப்பும் முடிவையும், படைகளை அனுப்பும் முடிவையும் எடுக்கும் ஆட்சியாளர்களின் மூளையை பரிசோதிக்க வேண்டும்.” – எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
