கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் கொல்லமுன கிராம சேவகர் பிரிவும், மாபே மேற்கு கிராம சேவகர் பிரிவும், கம்பஹா மாவட்டத்தில் எலபிட்டிவல நவ மஹர கிராமம் சேவகர் பிரிவும், மகுல் பொகுன கிராமத்தின் மகுல் பொகுன் வீதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், காலி மாவட்டத்தில் திக்கும்புர கிராம சேவகர் பிரிவு, அடநிகித கிராம சேவகர் பிரிவு, இரத்தினபுரி மாவட்டதில் சன்னஸ்கம கிராம சேவகர் பிரிவு, தொம்பகஸ்வின்ன கிராம சேவகர் பிரிவு, கொடகம கிராம சேவகர் பிரிவு, கட்டங்கே கிராம சேவகர் பிரிவு,
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவௌ நகரம், கேகாலை மாவட்டத்தில் உடபொத்த கிராம சேவகர் பிரிவு,கெந்தாவ கிராம சேவகர் பிரிவு ஆகயனவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

