நானுஓயா மாணவி மரணத்தின் மர்ம முடிச்சு இன்று அவிழ்க்கப்படும்

நானுஓயா, டெஸ்போட்தோட்ட ஆற்றிலிருந்து  சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த  யசோதா என்ற மாணவியே நேற்று காலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

” மகள் நேற்றிரவு (28) 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும் போது மகளை காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்.” என யசோதாவின் தாயார் நானுஓயா பொலிஸாரிடம் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று இடம்பெறவுள்ள பிரதே பரிசோதனை ஊடாக மரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles