நானுஓயாவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மீட்பு!

நானுஓயா பகுதியில் நிவாரண விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த ஒரு தொகை உர மூட்டைகளை,  அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.

நானுஓயா பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் அதிக விலைக்கு இரசாயன உரம் விற்பனை செய்யப்படுவதாக நுவரெலியா நுகவோர் அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, மேற்படி வர்த்தக நிலையங்களும், வர்த்தகர்களின் வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. 129 உர மூட்டைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நிவாரண விலையில் 1500 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக பெற்றுக்கோடுக்கப்பட்ட இந்த உர மூட்டைகள் 3000 ரூபா தொடக்கம் 4000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் விவசாயினளுக்கு இந்த உரத்தினை 1500 ரூபாவுக்கே பெற்றுக்கொடுக்க நீதி மன்றத்தில் கோர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles