” நாமல் டபள்கேம்” – பதிலடி கொடுக்கிறது சஜித் அணி

பாதீட்டுக்கு எதிராக கருத்து வெளியிடுவதுபோல் நாமல் ராஜபக்ச நாடகமாடிவருகின்றார் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட பாதீட்டில் இருந்த விடயங்கள் இந்த பாதீட்டிலும் உள்ளன என்று நாமல் ராஜபக்ச கூறுவதுடன், பாதீட்டை தோற்கடிக்க எதிரணி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பாதீடு குறித்து சீறிவிட்டு, கடந்த முறை பாதீட்டை ஆதரித்தவர்கள் இந்த முறை எதிர்க்க முடியாது என சமாளிப்பு வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் அவரின் இரட்டை அரசியல் நாடகம் அம்பலமாகின்றது. மொட்டு கட்சி தலைமையகத்தில் அவர்களின் சகாக்கள் முன்னிலையில் இந்த கருத்தைக் கூறட்டும். மக்கள் மத்தியில் இந்த நாடகம் எடுபடாது, அவர்கள் தந்த வலிகளை மக்கள் மறக்கவில்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles