நாளை அவசரமாக கூடுகிறது அரசியலமைப்பு பேரவை!

அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் அதன் தலைவரும், எட்டாவது முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நாளை (03) நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் செயலாளரும், நாடாளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

மேலும், நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்டுள்ள காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள் இதன்போது மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles