இ.போ.சபையின் டிப்போக்களின் ஊடாக டீசல் வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதன் காரணமாக நாளை (20) முதல் அனைத்து பஸ்களில் 50 வீதமான சேவைகள் இடம்பெறும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அதன்படி இன்று முதல் நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மூலம் நாளாந்தம் 800,000 லீற்றர் டீசல் வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வாரம் 70% வீதத்திற்கும் அதிகமான தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக பொது போக்குவரத்தை முடிந்தவரை பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
