நாளை முதல் மூன்று பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் அமுலுக்குவரும் வகையில் மூன்று பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி 425 கிராம் டின் மீன் 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 490 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 97 ரூபாவாகும்.

அத்துடன், கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 225 ரூபாவாகக் காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles