மஸ்கெலிய பிரதேச சபைக்கு உற்பட்ட சாமிமலை கவரவில 320/c பிரிவிற்கு நிரந்தர கிராம சேவகர் ஒருவரை சேவையில் அமர்ந்துமாரு இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித பிரிவில் சேவையாற்றி வந்த கிராம சேவகர் கடந்த 11 திகதி ஓய்வு பெற்று சென்றதை தொடர்ந்து 320/m மஸ்கெலிய பிரிவு கிராம சேவகர் தற்காலிகமாக குறித்த பிரிவை பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 11 ம் திகதி முதல் இன்றுவரை 320/c பிரிவு காரியாலயம் இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கபட்டுள்ளதாகவும் இதனால் தமது முக்கிய விடயங்களை செய்து கொள்ளமுடியவில்லை எனவும் காரியாலய நாட்கள் கிராம சேவகரின் சேவை நேரம் என்பன காட்சிப்படுத்த பட்டிருந்த போதிலும் அது முறையாக நடைமுறை படுத்த படவில்லை எனவும் இது குறித்து மஸ்கெலிய பிரதேச சபை தலைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரிவில் கிலனுஜி டீசைட் பாக்றோ சோளங்கந்தை கவரவில போன்ற தோட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் சுமார் 5800 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டு என இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
(சாமிமலை நிருபர் ஞானராஜ்)