மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உரித்தான ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் இன்று (8) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கான தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுமே தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
” நாளாந்தம் 18 கிலோ பச்சை கொழுந்து பறித்தால் மட்டுமே ஒரு நாளுக்கான வேதனம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் அரை நாளுக்கான சம்பளமே பதிவிடப்படுகின்றது. கொழுந்து இன்மையால் 12 கிலோ மாத்திரமே பறிக்ககூடியதாக இருக்கின்றது. அதற்காக காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது.
எனவே, எமக்கு தொழில் சலுகைகள் வழங்கப்படவேண்டும். உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அதனை வலியுறுத்தியே இந்நடவடிக்கையில் இறங்கினோம்.” – என்றார்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்