“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
“ நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்தவன். அதனை இல்லாது செய்தால் நல்லது.” என்றும் மஹிந்த கூறினார்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான நகர்வா இது என எழுப்பட்ட கேள்விக்கு, “ அப்படியும் இருக்கலாம், ரணிலை பற்றி தெரியும்தானே…”என மஹிந்த பதிலளித்தார்.
