வென்னப்புவ, பொரலஸ்ஸ ஹோட்டல் ஒன்றில் நீச்சல் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன், சந்தலங்காவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாகந்துறையில் உள்ள டியூஷன் வகுப்பில் இருந்து 80 பேர் கொண்ட பள்ளி மாணவர்களுடன் உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், சக மாணவர்களுடன் குறித்த பாடசாலை மாணவன் குளத்தில் நீராடியபோதே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










