நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கொழும்பில் இதொகா போட்டி!

உள்ளாட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா, பதுளை, கண்டி , இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என தெரியவருகின்றது.

இதில் ஒரு சில மாவட்டங்களில் தனித்து சேவல் சின்னத்திலும், எஞ்சியுள்ள மாவட்டங்களில் கூட்டணியாகவும் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸின் தேசிய சபை எதிர்வரும் 17 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது இது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கப்படும்.

Related Articles

Latest Articles