” நுவரெலியா மாவட்டத்தில் இன்று (14.12.2020) காலை 9 மணிவரை வெளியான சுகாதார பிரிவினரின் தகவலின் அடிப்படையில் இதுவரையில் 298 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 572 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வலப்பனை சுகாதார பிரிவு பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதியாகியுள்ளது என்று நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இமேஸ் பிரதாப்சிங் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான தொற்றாளர்கள் கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த அடிப்படையில் பெலியகொடை மீன் சந்தை ஊடாக 52 பேருக்கும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட 245 பேருக்கும் கொழும்பு துறைமுகத்தில் கடமையில் இருந்த ஒருவருக்குமாகவே மொத்தமாக நுவரெலியா மாவட்டத்தில் 298 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.
அம்பேகமுவ 34 பொகவந்தலாவ 01 கொட்டகலை 73 கொத்மலை 89 லிந்துலை 57 மஸ்கெலியா 03 நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட 214 நவதிஸ்பனே 01 நுவரெலியா 38 இராகலை 34 வலப்பனை 28 என மொத்தமாக 572 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.
அம்பேகமுவ 141 பொகவந்தலாவ 35 ஹங்குரன் கெத்த 4 கொட்டகலை 27 கொத்மலை 07 லிந்துலை 22 மஸ்கெலியா 33 நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட 01 நவதிஸ்பனே 07 நுவரெலியா 07 இராகலை 09 வலப்பனை 05 என மொத்தமாக 298 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டு இவர்கள் அனைவரும் கொரோனா மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்.இவர்களில் ஒரு சிலர் 14 நாட்களை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (14.12.2020) காலை 9. மணிவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 6713 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரம் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 4891 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவற்றில் 4319 குடும்பங்கள் 14 நாட்களை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட பிரதேசமாக அம்பேகமுவ பிரதேசம் இனம் காணப்பட்டுள்ளதுடன் இங்கு 141 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர் அதே நேரம் குறைவான தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட பிரதேசமாக நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் இனம் காணப்பட்டுள்ளது.இங்கு ஒரு தொற்றாளரே இனம் காணப்பட்டுள்ளார்.
மேலும் நுவரெலியா மாவட்டத்திற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தருகின்றவர்களுக்காக சுற்றுலா விடுதிகளோ சுற்றுலா இடங்களோ இன்னும் திறக்கப்படவில்லை எனவும் நுவரெலியாவிற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவிக்கின்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் இனம் காணப்படுவதன் காரணமாகவே சுற்றுலா பிரயாணிகளை இங்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு










