நுவரெலியா மாவட்டத்தில் விடாது பெய்யும் அடை மழை!

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, தலவாக்கலை , நானு ஓயா, அக்கரப்பத்தனை போன்ற பிரதேசங்களில் இன்று காலை முதல் கடும் மழை இடைவிடாது பெய்து வருகிறது.

இதனால் இப் பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்து.

மேலும் தலவாக்கலை பிரதேசத்தில் பெய்து வருகின்ற அதிக மழை காரணமாக மேல் கொத்மலை நீரேந்தும் பகுதியில் நீர்மட்டம் உயர்வதை அவதானிக்க முடிந்தது.

அதேநேரத்தில் நானு ஓயா பிரதேசத்தில் மழை புகை மூட்டம் அதிகரித்ததன் காரணமாக நுவரெலியா- தலவாக்கலை நோக்கி பயணிக்கும் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு நானு ஓயா பொலிசார் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் நுவரெலியாவில் (13) காலை பத்து மணிக்கு மேல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆ.ரமேஷ்

Related Articles

Latest Articles