நுவரெலியாவில் ஏ.டி.எம். இயந்திரம் உடைப்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம். இயந்திரம் (26) இரவு உடைக்கப்பட்டுள்ளது.

எனினும் (27) காலையிலேயே குறித்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அமைந்துள்ள பின்புற அறையினுள் காணப்பட்ட இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு உள் நுழைந்து பணம் வழங்கும் இயந்திரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணம் கொள்ளையிட வில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் எனினும் இதுவரையில் சந்தேகத்தின் பெயரிலும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீசீடிவி கமராவில் பதியப்பட்ட சாட்சியங்களை ஆதாரமாக வைத்து நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த இடத்திற்கு சென்று செய்தி சேகரித்துகொண்டிருந்த இரண்டு பிராந்திய ஊடகவியலாளர்கள் மீதும் குறித்த இடத்தில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles