நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கேலைகால பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் சாய்ந்து இழுத்து செல்லப்பட்டு சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் நுவரெலியா பொது வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீ. தீபன்ராஜ்