நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் வேனொன்று வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாவந்த வேனொன்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இன்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வேனில் சுமார் 10 பேர்வரை பயணித்துள்ளனர் என தெரியவருகின்றது. இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் புசல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இருவர் உயிரிழந்துள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆ.ரமேஷ்
		
                                    









