பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை – ஐ.தே.கவின் ஆனந்தகுமார் கண்டனம்!

பங்காளதேஷில் இந்துக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதிக்கும் வகையிலான புகைப்படம் பேஸ்புக்கில் பரவியதைத் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான வன்முறை வெடித்தன. துர்கா பூஜையின்போது ஏராளமான இந்து கோவில்கள் உடைக்கப்பட்டன. இந்துக்கள் பலர் தாக்கப்பட்டனர். இந்த வன்முறைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியதால், கலவரத்தைக் கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் அதிவிரைவு பட்டாலியன் படையினர் (ஆர்ஏபி) களமிறக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள், வன்முறைக்கு காரணமானவர்கன் என சுமார் 600 பேரை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர். உடனடியாக அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் ஷேக் ஹசீனா நடவடிக்கையெடுக்க வேண்டும்.

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஐ.தே.கவின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles