பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. அணித் தலைவர் குசல் பெரேரா 120 ஓட்டங்களையும், தனஞ்ச டி சில்வா 55 ஓட்டங்களையும் பெற்றனர். 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 286 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் 287 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 42.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களைப்பெற்றது. இதன்படி இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. துஷ்மந்த சமீர ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.