பசறையில் முறிந்து விழுந்தது இராட்சத மரம் – வீடு சேதம் – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

பசறை, கமேவெல 4 ஆம் கட்டை பகுதியில் வீடொன்றின்மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. பொருட்களும் உடைந்துள்ளன.

நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் 2 மற்றும் 8 வயதுகளுடைய இரு சிறுவர்களும், அவர்களின் தாயும் இருந்துள்ளனர். தந்தை கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.

மரம் முறிந்து விழுந்தவேளை வீட்டில் எவரும் இருக்கவில்லை.
தமது இரு பிள்ளைகளையும் உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு சிறுவர்களின் தாய் தொழும்புவத்தை தேயிலை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற வேளையிலேயே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles