கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா விநியோக நிறுவனங்களால் வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு சுமார் 25 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், பேக்கரி பொருட்களும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் சந்தைக்குப் பேக்கரி பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
