பதவிகளுக்காக விலைபோகமாட்டோம் – கதிரேசன் ஆலயத்தில் உதயா சத்தியம்

” கோட்டாபய ராஜபக்சவுக்கு வக்காலத்து வாங்கி, சிறிது காலம் தலைமறைவான மலையக அரசியல்வாதிகள் சிலர் மீண்டும் துள்ள ஆரம்பித்துள்ளனர். அவர்களின் முகமூடி அரசியல் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது, பதவிக்கும், பணத்துக்கும் விலைபோகாத எங்கள் பின்னாலேயே மக்கள் அணிதிரள்வார்கள்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

பத்தனை, தலவாக்கலை, லிந்துலை ஆகிய பிரதேசங்களில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர்களுடான சந்திப்பு கூட்டம் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இன்று (02.10.2022) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டிலே ஒரு புறம் விலை அதிகரிப்பு இடம்பெறுகின்றது, மறுபுறத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும்பாடு படுகன்றனர். மூவேளை உண்டு வாழ்ந்த மக்கள் உணவு வேளையை சுருக்கியுள்ளனர். மேலும் சிலர் உண்ணும் அளவை குறைத்துள்ளனர். சிலருக்கு உணவு உண்ண வழியில்லை. பிள்ளைகளை பாடசாலைகளில் மயங்கி விழும் நிலையும் உள்ளது. தற்போதைய நிலைமை நீடித்தால் அடுத்து வரும் மாதங்களில் நிலைமை மோசமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் சுமைக்கேற்ற ஊதியம் இல்லை. தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால் பழைய சம்பளம்தான் வழங்கப்படுகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் போராடுவோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக குரல் கொடுப்போம். மற்றையவர்களைபோல ஏமாற்று அரசியல் நடத்த மாட்டோம்.

மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே எமது உயிர்மூச்சு. அதற்காக எல்லாவழிகளிலும் போராடுவோம். பணத்துக்கும், பதவிகளுக்கும் விலைபோக மாட்டோம். கொள்கை வழியில் பயணிப்போம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles