பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள ரஷ்ய தூதுவருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள நிலையில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரி (Yury Materiy), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (08) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ளபோதும் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த தான் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்றும் அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் அதேநேரம் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் யூரி மேட்டரி இதன்போது வலியுறுத்தினார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் என்ற வகையில், இலங்கையில் ஆற்றிய பணிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள், அதற்காக தூதுவருக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

பதவிக்காலம் முடிந்து தான் இலங்கையை விட்டு வெளியேறினாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக யூரி மேட்டரி இதன்போது உறுதியளித்தார்.

மேலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் வெற்றிப்பெறுவதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles