ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பந்துலலால் பண்டாரிகொட இன்று (21) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய
மனுஷ நாணயகார அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே கௌரவ பந்துலலால் பண்டாரிகொட இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
பந்துலலால் பண்டாரிகொட அவர்கள் எட்டாவது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருந்தார்.