பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கோல்பேஸில் கையெழுத்து வேட்டை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் போராட்டம் நேற்று மாலை கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள் மற்றும் மூவின மக்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Articles

Latest Articles