தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீடம் நாளை (23) ஹட்டனிலுள்ள அதன் தலைமையகத்தில் கூடவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரும் சங்கம் மற்றும் முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரத்தின் தலைமையிலேயே உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பல அதிரடி மாற்றங்கள் எடுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
திகாம்பரத்துக்கும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தற்போதைய பொதுச் செயலாளர் திலகராஜுக்கும் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை காரணமாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவருகின்றது.