உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு ரஸ்டம் உமெரோவின் பெயரை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பரிந்துரைத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 550 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன், புதிய பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை ஜெலன்ஸ்கி பரிந்துரை செய்துள்ளார். தனது பரிந்துரையை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.










