மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை கொழும்பு தோட்டத்தில் 2019 செப்டம்பர் மாதம் 20 ம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் 24 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு தீக்கிரையானது. உடமைகளும் சேதமாகின.
இதனால் நிர்க்கதியான பதினாறு குடும்பங்களும் தோட்ட கலாச்சார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு சில நாட்கள் கடந்த பின்னர் மீண்டும் அதே வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டனர்.
பாதிப்புக்குள்ளான பதினாறு குடும்பங்களுக்கு மாற்றிடங்களில் வீடுகள், ஒரு மாதகாலத்தில் அமைத்து கொடுக்கப்படும் என அன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அரசியல் பிரமுகர் ஒருவ வாக்குறுதி வழங்கி சென்றதாகவும் ஆனால் இது குறித்து இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டனர்.
எனவே, இம்மக்களுக்கு புதிய ஆட்சியின்கீழாவது புது வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படுமா?
சாமிமலை நிருபர் ஞானராஜ்










